விடியலின்றி போனது என் வாழ்வு வரையரையற்ற
உனது வாததில்...
தாங்காத மனமதோ தலைதூக்கத் தவிக்குதடி
உன் செயலால்..
அதன் விளக்கம் என்னவோ என்பாசம் மட்டுமே..
செவ்வாய், 12 ஜூலை, 2011
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
பூத்திருச்சு கண்ணு பூத்துருச்சு...
அழுகையில் பூக்கும் கனங்களின் கண்ணீரின் என்றும்
பன்னீரை பிரசிப்பதில்லை உன்னை போல்..
தங்கை உணர்வோடு கலந்த என் உயிர் இன்று
அனாதையாகி தவிக்கிறது..,
ஓ ஜனனி.. என் சுரம் நீ..
சுரத்தில் சுகம் காண்பவளே அதற்கு என்கனவை
விலை கேட்டால் நியாயம் என்னடி..
சொந்தம் என வந்தவள் பந்தத்தை விளைத்தவள்
யார்நீயென உன் பார்வைதனை வீசுகிறாயே
நியாயமா சொல்லடி..,..
நானு உந்தன் உறவை..
உயிரின் விண்ணப்பம் உயிரென்பது
உன்காதல் தேடலில் தான் புரிந்தது
புரிதலுக்கும் உயிரின் தாகம் உன்காதல்
உயில் தானா என் அன்பே...
திங்கள், 28 மார்ச், 2011
குடகுமலை காடு..
தனியாக தத்தளிக்கும் தருணங்களும் தனித்து
தத்தளிக்கிறது வலியதின் ஆற்றாமைதனில்..
ஆயினும் நீயில்லை எனும் நிஜமதுவோ உன்
நிழலதை மட்டுமே வேண்டுகின்றதம்மா..
வியாழன், 24 மார்ச், 2011
மலரே தென்றல்..
காத்திருக்கும் கனங்கள் கல்லாக வீற்றிருக்கிறது
நம்காதலில் மாத்திரம்..
கணத்தின் யுகம் பிரிதலின் பிரியக்கணங்களேயன்றி
வேறில்லை..
தேவதை இளம் தேவி..
காதலின் வழி நெடுகிலும் கண்ணீரின் வழிக்கோலம்
காத்திருந்து காயத்தின் வடுவதின் மீதமே நீ, நான்
எனும் நம் காதல்..
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
நிலவோடும் மலரோடும்..
வலிக்கும் தருணங்களுக்கு வழியில்லை உன்னை
தவிர..
வாடுதல்தனில் வருத்தமில்லை உன் நினைப்பை
தவிர..
புதன், 16 பிப்ரவரி, 2011
அன்னை மடியில்..
உயிர்தனில் ஜனனம் கொடுத்தும் மரணவேதனை
ஏன் தாயே உன்பிள்ளைக்கு..
உன் முகம் மறந்ததில் மறத்து போனது இதயம்..
சொந்த சுமைய தூக்கி..
நினையாத நிஜங்கள் இன்று என்னை நினைக்கிறது
போலும் அதனால்தான் அனலில் வேகுகின்றது என்னோடு
உன் நினைவுகளும் என்னுல்..
உதயம் கீதம் பாடுவேன்..
வழி மாறுதலில் துலாவிய பயணமின்று வலி
தூண்டலில் தவிக்கிறது தனியாக..சொந்தங்களும்
பகைதனில் ஏனோ தடம் மாறுகின்றது பந்த பாசங்கள்..
எனது ராகம் மௌனராகம்..
அன்பனின் ஞாபகக்கண்ணீர் தாலாட்டில் தலைசாயும்
ஜீவன் நானடா..கண்ணீருக்கும் வலிக்கும் உன் ஞாபகங்கள்
என் ஆன்மாவின் ராகமாக உன்னை என்றென்றும் தாலாட்டும்.
எதிர்பார்த்தேன் இளங்கிளிய..
எதிர்பார்ப்பின் நொடிகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது
என்னோடு உன்னையும் சேர்த்து தூது விடுதலே என்
துதியோ!
சனி, 12 பிப்ரவரி, 2011
ஆரேங்கும் தானுரங்க..
உன் பிரிவால் நாதீயற்று தவிப்பது நான் மட்டுமல்ல,
நம் வாழ்வில் நாம் கண்ட சந்தோஷ நிமிடங்களும்
தான்..
சனி, 5 பிப்ரவரி, 2011
ஆறடி சுவரு தான்..
கபடத்தோடு நடைபோடும் காலந்தனை காப்பதல்லடி
காதல்.. காவலை மீறும் காதல் விழிநீரின் துணையின்றி
கடந்ததாயில்லை..ஆயிரம் தடைகள் வந்தாலும் ஆயராமல்
கை பிடிப்பேன் கலங்காதே
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
தென்றல்காற்றே தென்றல்காற்றே....
கண்களில் பலநூறு கோலம் கோபமேதுமில்லாமலே..
மாயமறைவில்தான் இன்றெல்லாம் சோகம் தேடும்
சொந்தங்களோ..
சனி, 15 ஜனவரி, 2011
ஓ நெஞ்சமே
என் ஜீவன் கலந்த காற்று உன் சுவாசம் மட்டும்
சேரமறுப்பதேனடி..சிந்தித்தேன் சிறைபவில்லை உன்
சுவசக்காற்றும் நிந்திக்கிறது என்னை..
வியாழன், 13 ஜனவரி, 2011
குயிலபிடிச்சு..
உலகந்தனில் வேட்டையாடும் விவேகமோ நானறிந்தது
நானகநான் ஆனபோது தான்..பயனொன்று பயனின்றி போனது
விபரமறிந்த போது விவாதம் வாயடைத்ததே...
செவ்வாய், 11 ஜனவரி, 2011
கண்ணீர் சிந்தும் மேகம்.
சிந்தும் கண்ணீரெல்லாம் உன் கல்லறையில் படிந்து
கானல் நீரென என்னோடு சேர மறுக்கிறது நீ இல்லை
எனும் நிஜம்தனை ஏற்க மறுத்து...
காதலுக்கு கண்கள் இல்லை
பொறிக்கப்பட்ட நினைவுகள் பொதிப் பொதியாக
பொழிவிழக்கிறது.. அதில் கொஞ்சம் கொஞ்சமாக
ஆவியாகிறது எனது ஜீவன் கண்ணீராக மாறியே..
திங்கள், 10 ஜனவரி, 2011
கூண்டவிட்டு ஒரு பறவ..
காதலின் சொந்தம் சோகமொன்று தான்...
வாழ்வதில் நியாயம் நம்பாசமே மொசமல்ல
இது வாழ்வின் மோட்சமே உறவுகள்
உணரும் வரை மாறாதது எம்சோகமும்..
யாருக்கு ஆறுதல்
நினைவுகள் ஆழமாக ஆழமாக கனக்கிறது
இதயம்.. மீளா துயரமதில் உன் ஞானபகங்கள்
மீளாமல் உன்னை நாடுகின்றது ஆறுதல் தேடி
என் சார்பாக..
ஒரு பெண்புறா..
அழுது அழுது தீர்த்த பின்பும் கூட என்னுள்ளம்
இன்னும் ஆறவில்லை.. இன்று வரையில் மகளாக
தொடர்ந்த என் நிழலில் இன்று தொடர்வதென்னவோ
நீ தந்த காயங்கள் மாத்திரமே..
செவ்வாய், 4 ஜனவரி, 2011
பாடி அழைத்தேன் உன்னை
மொழியொடு நா இருந்தும் ஊமைதான்
என்காதல் இதயமது விழித்திருந்தும் என்
நினைவுகளை மட்டும் உன்னில் உறங்க
விட்டது ஏனம்மா.
திங்கள், 3 ஜனவரி, 2011
பெண்மை கொண்ட மௌனம்
நினைவுகளின் தேக்கமே என் காதல் என்றானது
இன்று உன்பிரிவினால்..
நிழல் கூட நிராகரிக்கின்றது நிஜம்
எதுவென்று அறிந்த பின்பும் கூட..
என்னவளின் பிரிவிற்கு மாற்றீடு மரணமது
மட்டுமே..
சோதனை தீரவில்லை..
சொற்களில் சிதைகின்றது இன்றைய பந்தங்கள் இன்பம்
என்கையில் தோள்தரும் அன்புள்ளங்கள் எனச்சொல்லும்
அம்பு உள்ளம் துன்பம் எனும் போது அறிமுகமற்றவரிகள்
ஆகிவிடுகின்றார்கள்..
வெத்தல மடிச்சு கொடுத்த ..
கண்களால் வந்த காதல் எம்மனம் இணைந்த பின்பும்
கூட தவிப்பு அது மட்டும் துணையாகிவிட்டது நம்
வாழ்வில் காரணம் ஏதும் இல்லாமலேயே..
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
கல்யாணம் ஆயிரம் காலத்து..
அஃனியின் சாட்சிதனில் சேரும் நெஞ்சங்களின் காதல் மட்டும்
அஃனியில் சங்கமம் ஆகுது..
அஃனியதற்கு எண்ணை இந்நெஞ்சங்களின் புரிந்துணர்வு
தான் ..
தோப்பிலே இருந்தாலும்..
சுற்றி இருக்கும் பந்தங்கள் சுமையேற்றி
சுகம் காணம் நேரம் சுற்றங்கள் யாரென்று
நன்றாகவே புரிகின்றது.. வருவதும் போவதும்
அவரவர் தேவைக்கேற்ப தானடா..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
About
Top Tabs
aha
Menu
Blogger இயக்குவது.
About Me

- அத்விகா
- நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..