புதன், 29 செப்டம்பர், 2010

பூக்கள தான் பறிக்காதிங்க.


காதலில் மூழ்கி முத்தெடுக்கும் உள்ளங்கள்தனில்
வேதனையோடு வீழ்சிகாண எத்தனிக்கிறதிந்த
காதலுள்ளம் ஆயினும் வீழாது எந்நிலையிலும்


அதேகாதல் அதேகீதம்..


காதலூற்றில் கலந்த ஜீவநதியின்று
கண்ணீர் ஊற்றில் புறப்பட தயாரகிறது
கண்ணீர் வற்றிப் போனாலும் காதலென்னில்
வாழுமடி நான் வாழும் வரை..


செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே..


அன்பதில் அலைபாயும் அரங்கமே
அரங்கேற்றபடுவது காதலில் மட்டும்தான்
அழியா நினைவதயும்,மனநிறை அன்பையும்
இவளுள் விதைத்து துடிக்கதுடிக்க இவளை
விலக்குவதேன் அன்பே..


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஓ மீரா ஐ லவ் யூ..


இடைவெளியற்ற இயற்கையது இறஞ்சுகிறது உன்னோடு
இறப்பற்ற இரக்கமதற்கு என்னை இனைக்கவே..
பாராமுகம் கொண்டு நீயும் போவதென்ன சொல்லடி
கலைவிழியதில் கண்ணீர் சுமந்து..


ஆராரோ நான் பாடவோ நான் யார்..


நெருப்பென தெரிந்தும் நெஞ்மதில்
சுமப்பது - நியாயமற்றதல்லவே
நிலையானதை சுமப்பது நிச்சயமான
நிதர்சனமே..


செங்காத்தே செங்காத்தே..


உணர்வுக்கு உயிர் கொடுத்து
உயிரை பறிப்பதேனோ காதல்
எனும் பெயர் கொண்டு..
உயிர் பறித்து போனாலும்
பாழாகிப் போவதில்லை காதல்..


நான் உப்பு விக்க போனா ..


கானல் நீரதுவும் நிரசையுடனே எனை நிந்திக்கிறது
”எனக்குகூட பயனற்ற இழிவடைந்த ஜீவன் நீயென்று”
வலிசொல் அனைத்துக்கும் பலியாவன் நானே..


கானல் நீர்போல் எந்தன் காதல்..


இறந்த காலங்கள் இறக்காமல்
கணம்கணமாக இவளுள் வாழ்கின்றன..
ஒவ்வொறு வினாடியும் அவளுல்
அவனோடு கலந்த மணித்துளிகளே..
நினைவுகள் அறிவு இறக்கும் காலம் எய்தின்,
இவள் பெயர்தனையும் காலம்
சொல்லும் இறந்த காலம் என்றே..



வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சுற்றாதே பூமீ தாயே..


காட்சியல்ல காதலது சாட்சி
சொல்லி சன்மானந்தனை
சாய்க்கவே - மரணத்தின்
ஒத்திகையதை மாறாமல்
நீ விதித்தாலும் உன்முகம்
பார்த்தே தலைசாய்வேனுன்
நெஞ்சதில்..



வியாழன், 23 செப்டம்பர், 2010

எடுத்து வைச்ச பாலும்..


வான்வாசல் திறவும் வேளை
என் வாசல்தேடி வந்தவளே
மணவாசல் தனை மூடவோ
நான் உனக்கிட்ட மூம்முடிச்சு..



புதன், 22 செப்டம்பர், 2010

ஆலோலம் பாடும் தென்றலே..


நிசப்பத தேடலில் நிலையான உயிரே
தினம் அழைக்கிறேன் அழியா காதலுடன்
மறையா ஜீவனாக என் ஆன்மாதனில்
நிரந்தரமாக நீ நிலைத்திருக்கவே..



அட பொன்னான மனசே பூவான மனசே..


வாழ்வில் தொடரும் பந்தம்பாதியில் வாழ்வழித்தே
செல்கிறது ஏன்னிந்த நாடகம்- எற்ற இறக்கமின்றியே
இறப்பை தந்துசெல்வதொனோ..


திங்கள், 13 செப்டம்பர், 2010

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும்..


உறவற்றவனுக்கு உள்ளமளித்த என்னவளே..
பலியதுவும் என்னை பற்றுகொள்ளசெய்வனவோ
உன்னைவிடவும்... ஒய்ந்திருக்கும் நெஞ்மதில்
வான்சுமை ஏற்றாதே அன்பே..


About

Top Tabs

aha
Blogger இயக்குவது.

About Me

எனது புகைப்படம்
அத்விகா
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

About Me

எனது படம்
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

Followers

இதகான மழை..

திகதி..

எங்கிருந்து..

வந்தவர்..