வெள்ளி, 31 டிசம்பர், 2010

என் ஜீவன் பாடுது..


ஏக்கத்தின் முகவரிதனை எனக்களித்து ஏமாற்றமதை
நெஞ்சில் சுமப்பதபதேனடி காரணம் ஏதுமில்லாமலேயே
நேசத்தோடு உன்னையும் நெஞ்சத்தில் சுமக்கும்
காதலன் தான் நான் மறவாதே அன்பே..


வியாழன், 30 டிசம்பர், 2010

எனக்கொரு ம.புறா ஜோடி.


சிக்கனமாக சிதைக்கின்றது காதல் நியமமாக விகிதாசார
அடிப்படையில்,
நிம்மாதியின் வடிவமும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று தான் இந்த
காதலில்..


நான் உள்ளதை சொல்லட்டுமா?


வலியினிலும் வாழ்த்தும் மாண்புமிகு
உள்ளங்கள் நடுவே தீயாக எரிகின்றது
இவளின் உள்ளம்


புதன், 29 டிசம்பர், 2010

நடந்தால் இரண்டடி..


சொந்தங்களை சுமந்து சுமந்தே மனது வலிக்கின்றது
சுகமாக வேண்டிய சொந்தங்களே சோகமதை சுமக்க
வைப்பதேனோ..


பொட்டு வைச்சதாரு அன்னையே..


கண்ணீரின் பாரம் கோடியாயினும் தாங்கும் விழிகள்
உன் தனிமை கோலம் மட்டும் தாங்காதம்மா..
நியாயம் சொல்லும் நிதர்சனம் இதுதானா?


ஒரு பொம்மலாட்டம் நடக்குது..


வாழ்க்கை பந்தயம் இதம்மா..பந்தயந்தனை
நடத்துகிறான் பயமறியான் ஒருவன்.
எண்கட்டையாக சுழல்வது என்னவோ
இந்த அப்பவி மனிதன் தான் ..


செவ்வாய், 28 டிசம்பர், 2010

அண்ணனென்ன தம்பியென்ன..


சொந்தங்களின் உறவு சுவாசம் சுயதேவை முடியும்
வரைக்குமே..
தேவைகள் தீர்ந்தபின் தேவையற்று விலகுகின்றது
உறவெனும் சோக உல்லாசம்..


திங்கள், 27 டிசம்பர், 2010

உயிரே உயிரே..


உன்னை பிரியும் போது பாசத்தோடு பரிதவிப்பு
கூடுகின்றது எதிர்பாராமலே,
உலகை பிரியும் சமயம் ஏக்கத்தோடு விம்மியே
உயிரும் போகிறது..


கண்மணி நில்லு.. காரணம் சொல்லு..


உன்மௌனமதில் புரிகின்ற வார்த்தைகள்
யாவும் என்னை புலனிலக்கச் செய்கிறதன்பே,
அதை நீ ஏன் புரியவில்லை எனத்தான்
தெரியவில்லை..


சனி, 25 டிசம்பர், 2010

கண்ணின் மணியே கண்ணின்..


போராட்டங்கள் விலைபேசும் உலகிது
வழித்துனை இழந்தாலும் மனத்துணை
போதுமடி உனக்கு.அதுவே இழப்பிற்கான
உன்வெகுமதி- அதுவொன்றே போதும்
எத்துணையுமின்றி நீ உலகை ஜெயிக்க..


சனி, 4 டிசம்பர், 2010

கண்ணா உன் கோவிலை தேடி..


என்னை அறியாதவன்னல்ல நீ-இருந்தும்
ஏனிந்த ஊமை நாடகம் காதல் கற்றுதந்த
கண்கள் இன்று மோதலை பிரசவிப்பது
ஏனடா?


ஞாயிறு, 7 நவம்பர், 2010

மறக்கமுடியவில்லை...


காலத்தின் லீலைதனை மற்றம்செய்ய மாறாதது
எனும் கருத்ததில் தவிப்புதானும் பெயர்சூட்டிக்
கொள்கிறது மறதியின்மையென்று.



சனி, 6 நவம்பர், 2010

எடுத்த சபதம் முடிப்பேன்....


சத்தியமது நெஞ்சில் சாகவில்லை பெண்ணே,
சாத்தியமாகுமிது எத்தவறான நிலைதனிலும்
தவறாமல் சாதிக்கும் கலங்காதே..



சனி, 2 அக்டோபர், 2010

ஒரு பாட்டாலே சொல்லி ...


கைசேராத சொந்தமதிலும் மனம்சேரும் பாட்டோடு
சேர்ந்த சோகசந்தந்தனிலும் சலிக்காத அன்பொன்றே
போதும் கலங்காதே கரைசேரும்நாள் எம்வசமே..


அப்பன் யாரு அம்மா யாரு...


பிறக்கும்போதே துளிர்க்கும் கண்ணீர் இறக்கும்வரை
எம்மில் நதியாக பெருகெடுத்தவன்னமே முழ்கடித்து
ஒவ்வொறு வினாயும் இறக்கச்செய்கிறது..


வெள்ளி, 1 அக்டோபர், 2010

கல்யாணம் வைபோகம்..


காலத்தின் லீலைதனில் கபடமேசூழ காதலின் தீபச்சுடர்
காதலனின் கைதனிலின்று ஒளியிழக்குமென நினையா
நான் பேதைதான்..


வலைக்கு தப்பிய மீனு..


இழிவின் வலியிலும் வக்கற்றவன் வதைப்பிலும்
கண்ணீரின் ஞானமோ எம்சொந்தமாகி கற்றுத்தரும்
பாடமோ - எந்த சொந்தமும் தருவதில்லை..


புதன், 29 செப்டம்பர், 2010

பூக்கள தான் பறிக்காதிங்க.


காதலில் மூழ்கி முத்தெடுக்கும் உள்ளங்கள்தனில்
வேதனையோடு வீழ்சிகாண எத்தனிக்கிறதிந்த
காதலுள்ளம் ஆயினும் வீழாது எந்நிலையிலும்


அதேகாதல் அதேகீதம்..


காதலூற்றில் கலந்த ஜீவநதியின்று
கண்ணீர் ஊற்றில் புறப்பட தயாரகிறது
கண்ணீர் வற்றிப் போனாலும் காதலென்னில்
வாழுமடி நான் வாழும் வரை..


செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே..


அன்பதில் அலைபாயும் அரங்கமே
அரங்கேற்றபடுவது காதலில் மட்டும்தான்
அழியா நினைவதயும்,மனநிறை அன்பையும்
இவளுள் விதைத்து துடிக்கதுடிக்க இவளை
விலக்குவதேன் அன்பே..


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஓ மீரா ஐ லவ் யூ..


இடைவெளியற்ற இயற்கையது இறஞ்சுகிறது உன்னோடு
இறப்பற்ற இரக்கமதற்கு என்னை இனைக்கவே..
பாராமுகம் கொண்டு நீயும் போவதென்ன சொல்லடி
கலைவிழியதில் கண்ணீர் சுமந்து..


ஆராரோ நான் பாடவோ நான் யார்..


நெருப்பென தெரிந்தும் நெஞ்மதில்
சுமப்பது - நியாயமற்றதல்லவே
நிலையானதை சுமப்பது நிச்சயமான
நிதர்சனமே..


செங்காத்தே செங்காத்தே..


உணர்வுக்கு உயிர் கொடுத்து
உயிரை பறிப்பதேனோ காதல்
எனும் பெயர் கொண்டு..
உயிர் பறித்து போனாலும்
பாழாகிப் போவதில்லை காதல்..


நான் உப்பு விக்க போனா ..


கானல் நீரதுவும் நிரசையுடனே எனை நிந்திக்கிறது
”எனக்குகூட பயனற்ற இழிவடைந்த ஜீவன் நீயென்று”
வலிசொல் அனைத்துக்கும் பலியாவன் நானே..


கானல் நீர்போல் எந்தன் காதல்..


இறந்த காலங்கள் இறக்காமல்
கணம்கணமாக இவளுள் வாழ்கின்றன..
ஒவ்வொறு வினாடியும் அவளுல்
அவனோடு கலந்த மணித்துளிகளே..
நினைவுகள் அறிவு இறக்கும் காலம் எய்தின்,
இவள் பெயர்தனையும் காலம்
சொல்லும் இறந்த காலம் என்றே..



வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சுற்றாதே பூமீ தாயே..


காட்சியல்ல காதலது சாட்சி
சொல்லி சன்மானந்தனை
சாய்க்கவே - மரணத்தின்
ஒத்திகையதை மாறாமல்
நீ விதித்தாலும் உன்முகம்
பார்த்தே தலைசாய்வேனுன்
நெஞ்சதில்..



வியாழன், 23 செப்டம்பர், 2010

எடுத்து வைச்ச பாலும்..


வான்வாசல் திறவும் வேளை
என் வாசல்தேடி வந்தவளே
மணவாசல் தனை மூடவோ
நான் உனக்கிட்ட மூம்முடிச்சு..



புதன், 22 செப்டம்பர், 2010

ஆலோலம் பாடும் தென்றலே..


நிசப்பத தேடலில் நிலையான உயிரே
தினம் அழைக்கிறேன் அழியா காதலுடன்
மறையா ஜீவனாக என் ஆன்மாதனில்
நிரந்தரமாக நீ நிலைத்திருக்கவே..



அட பொன்னான மனசே பூவான மனசே..


வாழ்வில் தொடரும் பந்தம்பாதியில் வாழ்வழித்தே
செல்கிறது ஏன்னிந்த நாடகம்- எற்ற இறக்கமின்றியே
இறப்பை தந்துசெல்வதொனோ..


திங்கள், 13 செப்டம்பர், 2010

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும்..


உறவற்றவனுக்கு உள்ளமளித்த என்னவளே..
பலியதுவும் என்னை பற்றுகொள்ளசெய்வனவோ
உன்னைவிடவும்... ஒய்ந்திருக்கும் நெஞ்மதில்
வான்சுமை ஏற்றாதே அன்பே..


திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நிலவே வான் நிலவே..


அனைத்து தவங்களும் தவங்கிடக்க விளைந்தவன் நீ
ஆயினும் வில்லாக என்மனமதை துளைப்பதேனோ?


About

Top Tabs

aha
Blogger இயக்குவது.

Blog Archive

About Me

எனது புகைப்படம்
அத்விகா
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

About Me

எனது படம்
நான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..

Followers

இதகான மழை..

நேரம்..

Blog Archive

திகதி..

எங்கிருந்து..

வந்தவர்..